கோயிலை நிர்வகிப்பதில் தகராறு: ஓய்வுபெற்ற எஸ்.ஐ தற்கொலை

கோயிலை நிர்வகிப்பதில் தகராறு: ஓய்வுபெற்ற எஸ்.ஐ தற்கொலை

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அரியநாயகிபுரம் கால்டுவெல் காலனியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(61.) காவல்துறையில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.இதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் தூக்குப்போட்டு நேற்று இரவு வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றிய பாளையங்கோட்டை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அதை அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், “பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் வேல்முருகனின் குடும்பக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை நிர்வகிப்பது தொடர்பாகவும், வரவு, செலவு கணக்குகள் தொடர்பாகவும் வேல்முருகனுக்கும், வேறு சிலருக்கும் இடையே தகராறு இருந்துவந்தது. இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓய்வுபெற்ற சார் ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in