`யாரிடமும் சொல்லக் கூடாது'- வீடு புகுந்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை பதறவைத்த கொள்ளையர்கள்

கொள்ளையடிக்கப்பட்ட இடம்
கொள்ளையடிக்கப்பட்ட இடம்`யாரிடமும் சொல்லக் கூடாது'- வீடு புகுந்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை பதறவைத்த கொள்ளையர்கள்

சென்னை அரும்பாக்கத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் மனைவியை கட்டிப்போட்டு 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 75 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் உமா சங்கர். காவல்துறையில் ஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெற்ற இவர் அண்மையில் காலமானார். இவரது மனைவி 72 வயதான கங்கா என்பவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில்,நேற்று இரவு வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், வீட்டில் தனியாக இருந்த கங்காவை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 40 சவரன் தங்க நகை,  75 ஆயிரம் ரூபாய், செல்போன் ஒன்றையும் எடுத்து சென்றுள்ளனர்.

கொள்ளையடித்தவர்கள் மூதாட்டியின் விரலில் கத்தியால் காயம் ஏற்படுத்தி இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி சென்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் சென்றவுடன் கூச்சலிட்ட மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டதுடன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மூதாட்டியை கட்டிப்போட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in