இரவில் கொட்டித் தீர்த்த மழை… சதுரகிரி மலைக் கோயிலில் சிக்கிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்: அலர்ட்டான மீட்புக் குழுவினர்!

இரவில் கொட்டித் தீர்த்த மழை… சதுரகிரி மலைக் கோயிலில் சிக்கிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்: அலர்ட்டான மீட்புக் குழுவினர்!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கீழே வர முடியாமல் சிக்கித் தவித்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இக்கோயிலினுள் மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி, இந்தாண்டு, விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றே கோயிலுக்கு வந்தனர்.

இச்சூழலில், நேற்று சதுரகிரி மலை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், மழையில் இருந்து கீழே இறங்கக்கூடிய வழியில் அமைந்துள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, கருப்பசாமி கோயில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால், மலைக் கோயிலுக்கு சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து, கோயிலில் இருந்து பக்தர்கள் யாரும் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப் பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டனர். பின்னர் வந்த, மீட்புக் குழுவினர் பக்தர்களை பாதுகாப்பாக அடிவாரப் பகுதிக்கு அழைத்து வந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in