திடீர் விரிசலால் அதிர்ச்சி... 7-வது நாளாக உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் ஊசலாடும் 40 உயிர்கள்

தொய்வடைந்த மீட்புப் பணி
தொய்வடைந்த மீட்புப் பணி

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சுமார் 150 மணி நேரமாக சிக்கியிருக்கும் 40 தொழிலாளர்களை மீட்பதில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. நேற்று மாலை சுரங்கப்பாதையில் திடீரென எழுந்த ஓசை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

நவம்பர் 12 அன்று, சில்க்யாரா சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 40 தொழிலாளர்கள், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இரும்பு குழாய்கள் மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தொய்வடைந்த மீட்புப்பணி
தொய்வடைந்த மீட்புப்பணி

ஆனால், விபத்து நடந்த இடத்தை சூழ்ந்துள்ள, தொழிலாளர்களின் குடும்பத்தினர் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தொழிலாளர் களின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு அவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று அவர்கள் அரசை கோரி வருகின்றனர். சிக்கியுள்ள தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநிலை தொடர்பாக மருத்துவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை, அடைவதில் மீட்புக் குழுவினருக்கு தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று மாலை சுரங்கத்தினுள் எழுந்த மிகப்பெரும் விரிசல் சத்தம், மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் மற்றும் வெளியே காத்திருக்கும் தொழிலாளர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சத்தை விளைவித்தது.

இதனிடையே துரித மீட்பு பணிக்கு உதவுவதற்காக இந்தூரில் இருந்து இரண்டாவது மீட்பு எந்திரத்தை ராணுவ விமானத்தில் கொண்டுவர இந்திய விமானப்படை உதவியது. இதனையடுத்து இன்று மீட்புபணிகள் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

 HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in