3 சிவலிங்கங்களுக்கும் தமிழ்நாடு நாதர் என்று பெயர் சூட்டுங்கள்: திருவடிக்குடில் சுவாமிகள் வேண்டுகோள்

3 சிவலிங்கங்களுக்கும் தமிழ்நாடு நாதர் என்று பெயர் சூட்டுங்கள்: திருவடிக்குடில் சுவாமிகள்  வேண்டுகோள்

கடலூர் மாவட்டம்  பெண்ணாடம் அருகில் அமைந்துள்ள சிவன் கோயிலில் உள்ள சிவலிங்கங்களுக்கு  தமிழ்நாடு நாதர் என பெயர் சூட்ட வேண்டும் என்று திருவடிக்குடியில் சாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. அதன் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள். தற்போது ஆளுநர் ரவியால், தமிழகம், தமிழ்நாடு பெயர் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் சாமிக்கு தமிழ்நாடு நாதர் எனும் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " தேவாரம் பாடல் பெற்ற நடுநாடு முதல் தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலின் மேற்கு பிரகாரம் திருமாளிகைப் பத்தியில் சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டிய லிங்கம் ஆகிய மூன்று சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. முன்னோர் நம் மண்ணை எவ்வாறு மதித்துள்ளனர் என்பதற்கான உதாரணமாக இதனைப் பார்க்கலாம். இரு நிலனாய் தீயாகி நீருமாகி என்றார் அப்பர் பெருமான்.

சோழீஸ்வரர்,பாண்டீஸ்வரர், பல்லவனேஸ்வரர் போன்ற பெயரில் சிவாலயங்களையும் பார்க்கிறோம். இன்றைய தமிழ்நாடு, அன்று சேர, சோழ, பாண்டிய நாடுகளாக இருந்ததையும் அறிகிறோம். பெரியபுராணம் உள்ளிட்ட சமய இலக்கியங்களிலும் தமிழ்நாடு என்ற பெயர் இருக்கிறது.

எனவே,நடைமுறையில் உள்ள தமிழ்நாடு என்னும் பெயரை அடையாளப்படுத்தும் விதமாக திருநெல்வாயில் அரத்துறையில் உள்ள இந்த மூன்று சிவலிங்கங்களுக்கும்  கும்பாபிஷேகத்தின் போது பல தரப்பினரையும்  கலந்தாலோசித்து,ஒருங்கிணைந்த பெயராக அருள்மிகு தமிழ்நாடு நாதர் என்னும் திருநாமத்தைக் குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிட்டால் பன்னிரு திருமுறைகளையும் ஒருங்கிணைத்து திருமுறை நாதர் என்பது போல, தமிழ்நாடு நாதர் என்கிற பெயரும் வரலாற்றுச் சுவடாக அமையும்" என்று அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in