போலீஸார் குவிப்பு... மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

வன்முறை நடந்த வாக்குச்சாவடி
வன்முறை நடந்த வாக்குச்சாவடி

மணிப்பூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் துப்பாக்கிச்சூடு நடந்ததன் எதிரொலியாக 11 வாக்குச்சாவடிகளில் நாளை(ஏப்.22) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இன்னர் மணிப்பூரில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தல் நாளன்று மக்கள் அமைதியாக வாக்களித்துக் கொண்டிருந்தனர்.

வன்முறை நடந்த வாக்குச்சாவடி
வன்முறை நடந்த வாக்குச்சாவடி

அப்போது கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன

இதையடுத்து, மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை எழுப்பியது. இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்.22 மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in