ரெப்போ கடன் வட்டி விகிதம் அதிரடி உயர்வு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிப்பால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி

ரெப்போ கடன் வட்டி விகிதம் அதிரடி உயர்வு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிப்பால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகியகால கடன் வட்டி விகிதமான ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க உள்ளது.

கொரோனாவுக்கு பிறகு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை மிகவும் குறைத்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு மற்றும் வாகன கடனை சிரமத்துக்கு மத்தியில் செலுத்தி வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில் ரெப்கோ கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக உயர்த்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 5 முறை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. இதனால் வீடு, வாகன கடன்கள் வாங்கியவர்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகியகால கடன் வட்டி விகிதமான ரெப்கோ 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் அதிகரிக்க கூடும். இந்த வட்டி உயர்வால் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வீடு வாங்க முதலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்துடன் கடன் வாங்கியவர்கள் தற்போது அதைவிட அதிகமாக கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இதனால் மாதங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையாக கடன் வாங்கிய ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in