ஏடிஎம்மில் பணம் எடுக்க பலமுறை முயன்றும் தோல்வி: ஆத்திரத்தில் விவசாயி எடுத்த அதிர்ச்சி முடிவு


ஏடிஎம்மில் பணம் எடுக்க பலமுறை முயன்றும் தோல்வி: ஆத்திரத்தில் விவசாயி எடுத்த அதிர்ச்சி முடிவு

பலமுறை பணம் எடுக்க முயன்றும் பணம் வராதால் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை விவசாயி உடைத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாக்குளத்தை அடுத்த பொந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்யநாராயணா. இவர் ஸ்ரீகாக்குளம் பகுதியில் நேற்று ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றார். கார்டைப் போட்டு பலமுறை முயன்றும் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்யநாராயணா, ஏடிஎம் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தார். இதனால் இயந்திரம் சேதமடைந்தது.

இதனைக் கண்ட ஏடிஎம் காவலர், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சத்யநாராயணனை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். “தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளதாகவும், பலமுறை முயன்றும் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை. என்னுடைய அவரச் செலவிற்கு பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தினேன்” என்று அவர் கூறினார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in