வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்; ரகசியமாக கண்காணித்த போலீஸ்: பெண்ணுடன் சிக்கியது கும்பல்

வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்; ரகசியமாக கண்காணித்த போலீஸ்: பெண்ணுடன் சிக்கியது கும்பல்

சங்கரன்கோவில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்துவந்த பெண் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கும்பலுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் வீடு ஒன்று உள்ளது. அங்கு அவ்வப்போது யார், யாரெல்லாமோ வந்து செல்வதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த வீட்டை ரகசியமாகக் கண்காணித்தனர். இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் போலீஸார் அந்த வீட்டிற்குள் பெண் காவலர்களுடன் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது அங்கு குடும்ப கஷ்ட சூழலை பயன்படுத்தி அப்படி சிக்கித் தவிக்கும் பெண்களை அழைத்துவந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. அப்படி இருந்த ஒரு பெண்ணை போலீஸார் மீட்டனர். மேலும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி(32) என்பவரையும் கைது செய்தனர்.

மகேஸ்வரி கடந்த சில மாதங்களாகவே இந்த வீட்டை வாடகை கொடுத்து எடுத்துவைத்திருந்தார். இங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலும் செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவ்விசயத்தில் மகேஸ்வரிக்கு உடந்தையாக இருந்த வாசுதேவநல்லூரைச் சேர்ந்த மாரிதுரை, சங்கரன்கோவிலை சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in