`என் மகள் என்னை கொடுமை செய்கிறாள்'- சபரிமலை புகழ் ரெகானா பாத்திமா மீது தாய் பகீர் புகார்!

`என் மகள் என்னை கொடுமை செய்கிறாள்'- சபரிமலை புகழ் ரெகானா பாத்திமா மீது தாய் பகீர் புகார்!

சபரிமலை புகழ் ரெகானா பாத்திமா மீது ஆலப்புழா வடக்குக் காவல் நிலையத்தில் அவரது தாயார் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பத்து வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்கள் தரிசனத்திற்கு செல்ல தடை உள்ளது. சபரிமலை ஐயப்பன் நைஸ்டிக பிரம்மசாரி கோலத்தில் இருப்பதால் பெண்கள் வரத் தடை உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இடையில் சிலகாலம் மட்டும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ரெகானா பாத்திமா சபரிமலைக்கு வந்தார். இதனால் அவரும் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டார். ஆன்மிக நம்பிக்கையுள்ளோரிடம் இதனால் ரெகானா எதிர்ப்பை சம்பாதித்தார்.

இதன் மூலம் கேரளம் முழுவதும் அறியப்பட்ட நபர் ஆனார் ரெகானா பாத்திமா. இந்நிலையில், ரெகானா மீது இப்போது அவரது தாயார் பியாரி புகார் கொடுத்துள்ளார். அதில், “என் மகள் என்னை கொடுமையான இன்னல் செய்கிறார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாக்குகிறார். அவருக்குப் பயந்து நான் இப்போது உறவினர் ஒருவர் வீட்டில் வசிக்கிறேன். ஆனால் என் உறவினர்களின் இல்லத்திற்கும் வந்து என்னை ரெகானா மிரட்டுகிறார்” என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து ரெகானாவை நேரில் அழைத்து ஆழப்புழா வடக்குக் காவல் நிலைய போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in