
தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு அதிகாலையில் மூடுபனி நிலவும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் பிப்.18 தொடங்கி 3 நாட்களுக்கு இயல்பைவிட குறைவான வெப்பநிலையே காணப்படும். இவை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் என்றளவுக்கு நிலவும். இதனையொட்டி அதிகாலை நேரங்களில் பனிமூட்டமாகவும் தென்படும். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும். சில இடங்களில் பனிமூட்டத்துக்கு அதிக வாய்ப்புள்ளதால், வெப்பநிலையின் அளவு குறைந்தபட்சமாக 20 டிகிசி செல்சியஸ் வரையிலும் குறைய வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.