ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மகிந்த ராஜபக்ச அனுமதி?: அவரே வெளியிட்ட தகவல்

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மகிந்த ராஜபக்ச அனுமதி?: அவரே வெளியிட்ட தகவல்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திடீரென நோய்வாய்பட்டு கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் செய்தி பரவத்துவங்கியது. மகிந்த ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் சிலர் செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கொழும்பு ஊடகத்தில் இன்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in