வேகமாக குறைந்து வரும் சிறுவாணி நீர்: கோவை மக்களுக்கு குடிநீர் விநியோகம் தடை வருமா?

சிறுவாணி நீர்த்தேக்கம்
சிறுவாணி நீர்த்தேக்கம்

கோவை சிறுவாணி குடிநீர் விநியோகம் தினமும் குறைந்து வருதால் கண்காணிப்பு நடவடிக்கையில் குடிநீர் வடிகால் அலுவலர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் தினமும் 8 முதல் 10 செமீ அளவிற்கு குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 871.92 மீட்டராக (கடல் மட்ட உயரத்தின்படி) உள்ளது. இன்னும் 8 மீட்டர் அளவிற்கு குடிநீர் பெற முடியும். கடந்த சில மாதங்களாக அணையில் இருந்து தினமும் 10.2 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் வேகமாக குறைவதால் தினமும் எடுக்கும் குடிநீர் அளவு 9.2 கோடி லிட்டர் என குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் தேக்க பகுதியில் இனி வரும் காலங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லாததால் நீர்மட்டம் உயருமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள குடிநீரை வரும் ஜூன் வரை வழங்கவேண்டியுள்ளது.

தற்போதுள்ள அளவிற்கு அதிகளவு குடிநீர் தொடர்ந்து வழங்க முடியாது. இதனால், குடிநீர் அளவை மேலும் குறைக்க குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒன்று முதல் 2 கோடி லிட்டர் என குடிநீர் அளவை ஒவ்வொரு மாதமும் குறைத்து ஜூன் வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கோடை கால குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும் என குடிநீர் வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். குடிநீர் விநியோக பணி எவ்வித தடை இன்றி நடத்த வேண்டும். நீர் குகை பாதை, நீர் செல்லும் ஓடை, சுத்திகரிப்பு நிலையங்களில் தேவையான கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in