25 ஆண்டு குத்தகை; 17 லட்சம் பாக்கி: ஏமாற்றிய பெண்ணிடமிருந்து 25 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

25 ஆண்டு குத்தகை; 17 லட்சம் பாக்கி: ஏமாற்றிய பெண்ணிடமிருந்து 25 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேதநகர் பகுதியில் இன்று 25 கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல நிலங்கள் தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து மீட்டுவருகின்றனர். இந்நிலையில் கரியமாணிக்கபுரம் பகுதியில் உள்ள முப்பிடாரி அம்மன் கோயில் நிலம் வேத நகர் பகுதியில் உள்ள ஹவாய் தெருவில் உள்ளது. இதைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே புத்தளம் பகுதியைச் சேர்ந்த அன்னக்கிளி என்பவர் விவசாய பயன்பாட்டிற்காக குத்தகைக்கு எடுத்தார். ஆனால் இவர் எந்த விவசாயமும் செய்யவில்லை.

அறநிலையத்துறைக்கான குத்தகை தொகையையும் அன்னக்கிளி செலுத்தவில்லை. இதன் மூலம் அறநிலையத்துறைக்கு அன்னக்கிளி 17 லட்ச ரூபாய் பாக்கி வைத்திருந்தார். இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில், சிறப்பு தாசில்தார் சஜித் தலைமையிலான அதிகாரிகள் நிலத்தை காவல்துறை உதவியுடன் கைப்பற்றினர். மேலும் இது அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என பதாகையும் வைத்தனர். மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு 25 கோடியாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in