இணையவழி மோசடியில் 10 லட்சத்தை இழந்த கோடீஸ்வரன்: சைபர் க்ரைம் போலீஸ் அதிரடியாக மீட்டது!

இணைய வழியில் இழந்த பணத்தை மீட்ட போலீஸாருக்கு பாராட்டு
இணைய வழியில் இழந்த பணத்தை மீட்ட போலீஸாருக்கு பாராட்டு

இணைய வழி மோசடியில் இழந்த 10 லட்சத்தை சிவகங்கை போலீஸார் மீட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தி வைகை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (32). இவர் வங்கி கணக்கு மூலம் பண பரிமாற்றம் செய்து வந்தார். இந்தநிலையில், இணையவழி மோசடி கும்பல் இவரது கணக்கில் இருந்து 10 லட்சத்தை நூதன மோசடி செய்தது.

இது குறித்து சிவகங்கை எஸ்.பி செல்வராஜிடம் கோடீஸ்வரன் புகாரளித்தார். எஸ்பி அறிவுறுத்தல்படி சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பி நமச்சிவாயம் ஆலோசனையின் பேரில், இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு 10 லட்சத்தை மீட்டனர்.

அப்பணம் பரிமாற்ற ஆவணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு கோடீஸ்வரன் இழந்த ரூ.10 லட்சத்தை மீட்ட சிவகங்கை சைபர் க்ரைம் போலீஸாரை எஸ்பி செல்வராஜ் பாராட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in