250 ரூபாய் கடனுக்காக நடந்த கொலை: ரியல் எஸ்டேட் புரோக்கரின் வெறித்தனம்

கைது செய்யப்பட்ட லட்சுமணன்
கைது செய்யப்பட்ட லட்சுமணன்

தன்னிடம் வாங்கிய  ரூ.250 கடனை திருப்பித் தராததால்  கூலி தொழிலாளியை அடித்துக்கொலை செய்த ரியல் எஸ்டேட் புரோக்கரை கோவை  போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன் (32). கூலித் தொழிலாளி. இவர் சவுரிபாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (40) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.250 கடன் வாங்கினார். அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்திருக்கிறார்.  லட்சுமணன் பலமுறை கேட்டும் அவர் பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லையாம். 

இதனிடையே இன்று கங்கேஸ்வரன் சவுரிபாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லட்சுமணன் கங்கேஸ்வரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதில், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த லட்சுமணன் கங்கேஸ்வரன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில், சுருண்டு கீழே விழுந்த கங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இத்தகவல் அறிந்த பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும்  கொலை வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர். 250 ரூபாய் கடனுக்காக நடந்துள்ள இந்த கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in