ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீட்டு கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி

ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீட்டு கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35% ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனம் உள்ளிட்ட தனிநபர்களின் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வருகிறது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று மாற்றியமைத்துள்ளது. அதன்படி 0.36 சதவீதமாக ரெப்போ வட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ரெப்போ வட்டி உயர்வால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்க உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான இஎம்ஐ அதிகரிக்கு வாய்ப்புள்ளது. வட்டி உயர்வால் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in