ஆர்பிஐ கவர்னரின் அதிரடி அறிவிப்பால் இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி!

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்ஆர்பிஐ கவர்னரின் அதிரடி அறிவிப்பால் இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி!

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத கொள்கை கூட்டம் கடந்த 6-ம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்தா தாஸ் இன்று வெளியிட்டார். அதன்படி இந்த முறையும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சக்திகாந்த தாஸ் கூறுகையில், "ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் அப்படியே தொடரும். இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரிசர்வ் வங்கி அதை தொடர்ந்து கவனித்து வருகிறது. நிதியாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் கடனுக்கான இஎம்ஐ தொகையில் மாற்றம் இருக்காது என்பதால் கடனாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in