வீடு வீடாகச்சென்று ரேஷன் அரிசி வாங்கி விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை: சிக்கிய ரைஸ்மில் அதிபர்!

ரேஷன் அரிசி
ரேஷன் அரிசி வீடு வீடாகச்சென்று ரேஷன் அரிசி வாங்கி விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை: சிக்கிய ரைஸ்மில் அதிபர்!

தூத்துக்குடி மாவட்டத்தில், தன் அரவை ஆலையில் வைத்தால் போலீஸார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் ரயில் நிலையம் அருகில் ரேஷன் அரிசியை பதிக்கிவைத்து இருந்த ரைஸ் மில் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் ரயில் நிலையம் அருகில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையிலான காவலர்கள் குரும்பூர் ரயில்நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் இன்று திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கே ஒரு மரத்தின் பின்னால் 8 மூடைகளில் 320 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை வீடுகளுக்கே போய் விலை கொடுத்து வாங்கி வந்து கருங்குளம் மதன் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்(23) என்பவர் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. வெங்கடேஷ் ரேஷன் அரிசிகளை வாங்கித் தன் அரவை மில்லில் அரைத்து கோழித்தீவனத்திற்கு விவசாயிகளிடம் விற்றுவந்துள்ளார். அவரைக் கைது செய்த போலீஸார் அவர் வேறும் எங்காவது, இதேபோல் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து உள்ளாரா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in