மூன்று மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்தா?: தமிழக அரசு விளக்கம்

மூன்று மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்தா?: தமிழக அரசு விளக்கம்

தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுமா என்பதற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

பொதுவிநியோகத்திட்த்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) அவசியம். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் பொருட்களை சிலர் கள்ளச்சந்தையில் விற்பதாகவும், ரேஷன் கார்டுகளைத் தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்படும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 4.74 கோடி தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து தகுதி இல்லாத நபர்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருவதால், தகுதி இல்லாதவர்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால் தற்போது தமிழக அரசு ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in