கடலை நோக்கி பாய்ந்த 1,770 ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்!

 ஆமைக்குஞ்சுகள்
ஆமைக்குஞ்சுகள் கடலை நோக்கி பாய்ந்த 1,770 ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்!

உலக வன தினத்தை முன்னிட்டு சீர்காழி அருகே கூழையாரில் 1770 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், கூழையாறு, வானகிரி, தரங்கம்பாடி வரையிலான 26 கிராம கடற்கரையோர  பகுதிகளில் அரிய வகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் ஆண்டுதோறும்  முட்டையிடுவதற்காக வருவது வழக்கம். டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோர பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற்பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்புக்காடுகளில் முட்டைகளை இட்டுவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றுவிடும். 

இவற்றை அப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாத்து அவற்றை சேகரித்து  கூழையாறு, தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் உள்ள  ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகத்தில்  பாதுகாப்பாக வைப்பார்கள்.   45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் பின்னர்  முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும்.  அவற்றை  பாதுகாப்பாக கடலில் விடுவார்கள்.

ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் ஆட்சியர் உள்ளிட்டவர்கள்
ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் ஆட்சியர் உள்ளிட்டவர்கள்

உலக வன தினத்தை முன்னிட்டு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்ட 1770 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சீர்காழி வனத்துறை சார்பாக  கூழையார் கிராமத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முன்னிலையில் 1,770 ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. சீர்காழி  கோட்டாட்சியர் அர்ச்சனா, வனச்சரகர் டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில்  தற்போதுவரை 19 ஆயிரம்  ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில்  விடப்பட்டுள்ளதாக  வனத்துறையினர் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in