சத்தமே இல்லாமல் சாலையைக் கடந்த கருஞ்சிறுத்தை; ஷாக்கான சுற்றுலா பயணிகள்: வைரல் வீடியோ

சத்தமே இல்லாமல் சாலையைக் கடந்த கருஞ்சிறுத்தை; ஷாக்கான சுற்றுலா பயணிகள்: வைரல் வீடியோ

மத்தியப் பிரதேசத்தின் பென்ச் புலிகள் காப்பகத்தில் ஒரு அரிய கருஞ்சிறுத்தை சாலையைக் கடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மத்தியபிரதேசத்தின் பென்ச் புலிகள் காப்பக பகுதியில் இந்த கருஞ்சிறுத்தை கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அந்த புலிகள் காப்பக ட்விட்டர் பக்கத்தில், “ உலகெங்கிலும் பொதுவாக ஒரு அரிய விலங்கைப் பார்க்க மாதங்கள், சில சமயங்களில் பல வருடங்கள் கூட ஆகும். இருப்பினும் பென்ச்சில் ஒருவர் இயற்கை உலகின் அதிசயங்களை அடிக்கடி பார்க்க முடியும்” என தெரிவித்து, சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களில் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும்போது மெல்ல அந்த கருஞ்சிறுத்தை சாலையை கடக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய கவாசா வனப் பாதுகாவலர் ராகுல் உபாத்யாயா, “இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கருஞ்சிறுத்தை மீண்டும் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, பென்ச் புலிகள் காப்பகத்தின் டெலியா பீட் பகுதியில் ஒன்பது மாதங்களே ஆன கருஞ்சிறுத்தை குட்டியை, அதன் தாயுடன் சுற்றுலாப் பயணிகள் சிலர் பார்த்துள்ளனர்.

கடைசியாக, ஜூலை 2020 ல் பென்ச் புலிகள் சரணாலயத்தில் ஒரு கருப்புச் சிறுத்தை காணப்பட்டது. அந்த சிறுத்தைக்கு இப்போது இரண்டு வயதாகியிருக்க வேண்டும். அது தற்போது மகாராஷ்டிராவிற்கு அருகிலுள்ள கவாசா வனப்பகுதியில் உலவுகிறது. தற்போது காணப்பட்ட இந்த கருஞ்சிறுத்தை குட்டியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட கருஞ்சிறுத்தையும் ஒரே தாய்க்கு பிறந்தவை

முதல் முறையாக, அந்த தாய் சிறுத்தை இரண்டு குட்டிகளைப் பெற்றெடுத்தது. அவற்றில் ஒன்று சாதாரண நிறத்தில் இருந்தது, மற்றொன்று கருஞ்சிறுத்தை. இரண்டாவது முறையாக, அந்த தாய் சிறுத்தை மூன்று குட்டிகளைப் பெற்றெடுத்தது. அதில் ஒன்று கருஞ்சிறுத்தை” என தெரிவித்தார்.

மரபணு மாற்றம் காரணமாகவே சிறுத்தை கருப்பாக பிறக்கிறது என்று வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எழுத்தாளர் ருட்யார்ட் கிப்லிங்கின் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான 'தி ஜங்கிள் புக்' மூலம் கருஞ்சிறுத்தை இனம் பிரபலமடைந்தது. அதில் 'பகீரா' என்ற கற்பனையான கருப்பு சிறுத்தை பாத்திரம் இருந்தது. 'தி ஜங்கிள் புக்' படத்தில், 'மௌக்லி' என்ற சிறுவனின் நண்பனாகவும் பாதுகாவலனாகவும் 'பகீரா' என்ற கருஞ்சிறுத்தை காட்டப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in