மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணிக்கு டாக்டரால் நடந்த கொடுமை

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணிக்கு டாக்டரால் நடந்த கொடுமை

கர்ப்பிணி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜியோவானி குயின்டெல்லா பெஜேரா (32). இவர் தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரைக் கையும், களவுமாக பிடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த நிலையில், ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கடந்த 10-ம் தேதி மயக்க மருந்து கொடுத்து பெஜேரா, பாலியல் பலாத்காரம் செய்தார். இதை அந்த அறையில் மருத்துவமனை நிர்வாகம் வைத்திருந்த ரகசிய கேமிராவில் பதிவானது. அந்த ஆதாரத்தை போலீஸாரிடம் அவர்கள் வழங்கினர்.

இதையடுத்து பெஜேரா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், இதுவரை சிகிச்சைக்கு வந்த 5 பெண்களிடம் பெஜேரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in