பிறந்த நாள் பரிசு தருகிறேன் என்று அழைத்த வாலிபர்: நம்பிச் சென்ற இளம்பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கொடூரம்!

பிறந்த நாள் பரிசு தருகிறேன் என்று அழைத்த வாலிபர்: நம்பிச் சென்ற இளம்பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கொடூரம்!

பிறந்த நாள் பரிசு தருகிறேன் என்று அழைத்த நண்பர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண்ணை ரயில் நிலையம் அருகே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(35). ரயில்வேயில் வேலை செய்வதாகக்கூறி ஒரு இளம்பெண்ணிடம் பழகியுள்ளார். அடிக்கடி அவர் அப்பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளார்.

அந்த பெண் கணவரிடமிருந்து பிரிந்துள்ளார். அத்துடன் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக சதீஷ்குமார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சதீஷ்குமார், நேற்று தனது பிறந்த நாள் என அந்த பெண்ணுக்கு போனில் கூறியுள்ளார். அத்துடன் பிறந்த நாள் பரிசு தரவேண்டும், நேரில் வரவேண்டும் என்று அந்த பெண்ணை அழைத்துள்ளார்.

இதை நம்பி வந்த பெண்ணை புதுடெல்லி ரெயில் நிலையம் அழைத்து வந்த சதீஷ்குமார், ரயில் தண்டவாளம் பராமரிப்பு ஊழியர்களுக்கான குடிசைக்கு அழைத்து வந்தவர், அங்கு அவருடன் பணியாற்றும் மூன்று ரயில்வே ஊழியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் இருவர் குடிசைக்கு வெளியே காவலுக்கு நின்று கொள்ள இருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லியில் ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரால் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in