இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய பல் மருத்துவர்… நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம்: தோழி உள்பட 3 பேர் கைது

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய பல் மருத்துவர்… நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம்: தோழி உள்பட 3 பேர் கைது

விவாகரத்தான இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பல் மருத்துவர், அவரது தோழி உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை , காமக்கோட்டி நகரைச் சேர்ந்த பல் மருத்துவர் நிஷாந்த்(30). இவர் அதே பகுதியில் கிரிஸ்டல் என்ற பெயரில், பல் மருத்துவமனை நடத்தி வருகின்றார். அவர் தனது தோழி ஷெரினிடம் மருத்துவமனைக்கு பெண் உதவியாளர் வேண்டுமென கேட்டுள்ளார். இதன் பேரில், கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தனது பெண் தோழியான 30 வயதுடைய இளம்பெண்ணை நிஷாந்த் மருத்துவமனைக்கு ஷெரின் வேலைக்கு அனுப்பியுள்ளார்.

மருத்துவர் நிஷாந்த்.
மருத்துவர் நிஷாந்த்.

இந்நிலையில், பணியில் சேர்ந்த பெண்ணுக்கும், மருத்துவர் நிஷாந்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. விவாகரத்தான அந்த பெண்ணிடம் தானும் விவாகரத்து ஆனவன் என்றும், அப்பெண்ணை காதலிப்பதாகவும் நிஷாந்த் கூறியுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அத்துடன் மருத்துவமனை ஊழியரிடம் இவர் தனது மனைவி என்று அந்த பெண்ணை நிஷாந்த் அறிமுகம் செய்துள்ளார். இதனை உண்மை என நம்பிய அந்த பெண்ணை, நிஷாந்த் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் பின் பள்ளிக்கரணை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அவர்கள் இருவரும் திருமணமாகாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்துள்ளனர். போதைக்கு அடிமையான நிஷாந்த் தினமும் அந்த பெண்ணை டார்ச்சர் செய்து வந்துள்ளார். அத்துடன் தனது நண்பர்கள் ஹார்த்திக்(23), கோகுல்(26) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை ஒரு நிகழ்ச்சிக்கு நிஷாந்த் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நிஷாந்த், ஹார்த்திக், கோகுல் ஆகியோர் போதைப் பொருட்களை உட்கொண்ட பின்னர் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண், இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, நிஷாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவர்கள் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பல் மருத்துவர் நிஷாந்த், அவரது நண்பர் ஹார்த்திக், பெண்ணை வேலைக்கு சேர்த்த ஷெரின் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள கோகுலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in