இளம்பெண் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்முறை: முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இளம்பெண் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்முறை: முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை

குடிபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து திருமணமான பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகர் பகுதியில் திருமணமான 30 வயது பெண் வசித்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த முருகானந்தம்(60) என்பவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில், சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், முருகானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன்பு விசாரணை நடைபெற்றபோது அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.

இந்த வழக்கில் அவர் இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், " வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக முருகானந்தத்திற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in