தனியாக இருந்த ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம்: குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த செல்போன்!

ஆசிரியை பலாத்காரம்
ஆசிரியை பலாத்காரம்தனியாக இருந்த ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம்: குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த செல்போன்!

மும்பையில் வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவானரை செல்போன் சிக்னலை கொண்டு போலீஸார் கைது செய்துள்ளனர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா(45). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஆசிரியை வீட்டிற்குள் ஏப்.28-ம் தேதி அத்துமீறி உள்ளே நுழைந்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், மே 13-ம் தேதி இரவு தனியாக இருந்த ஆசிரியை வீட்டிற்குள் கணேஷ் ஜெயக்குமார் வர்மா புகுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

ஆனால், இச்சம்பவம் குறித்து போலீஸில் ஆசிரியை புகார் கொடுத்தார். இதையடுத்து கணேஷ் ஜெயக்குமார் வர்மா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். அவரது செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீஸார் கணேஷை தேடி வந்தனர். ஆனால், தனது இருப்பிடத்தை அவர் மாற்றிக் கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு கணேஷ் ஜெயக்குமார் வர்மா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 376, 377, 354 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in