சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை: திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் அதிரடி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை: திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் அதிரடி

திண்டுக்கல் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் பகுதியில் 14 வயது சிறுமி 2012-ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். போக்சோ வழக்குப்பதிவு செய்த வடமதுரை போலீஸார், வேடச்சந்தூர் அருகே வேடப்பட்டியைச் சேர்ந்த வெங்கசேன் (43) என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சரண், குற்றவாளியான வெங்கடேசனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in