லிப்டிற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை: குஜராத்தில் முதியவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்


லிப்டிற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை: குஜராத்தில் முதியவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
Eisenberg; Rothweiler; Winkler; Eisenberg & Jeck; P.C.

குஜராத் மாநிலத்தில் குடியிருப்பு லிப்டில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சந்த்கேடா குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு வசிக்கும் 9 வயது சிறுமியை 62 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவரது பெற்றோர் சந்த்கேடா காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார், லிப்டில் உள்ள சிசிடிவியைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமை செய்து உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜகத்பூரைச் சேர்ந்த முதியவர் பானுபிரதாப் ராணாவை தேடிப் பிடித்தனர். அவர் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in