30-க்கும் மேற்பட்ட சிறுமிகளைத் துடிதுடிக்க பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட ரவீந்தர் குமார்
நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட ரவீந்தர் குமார்30-க்கும் மேற்பட்ட சிறுமிகளைத் துடிதுடிக்க பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

30-க்கும் மேற்பட்ட சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூர கொலையாளிக்கு ஆயுள் தண்டனை அளித்து டெல்லி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ரவீந்தர்குமார்
ரவீந்தர்குமார்30-க்கும் மேற்பட்ட சிறுமிகளைத் துடிதுடிக்க பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ரவீந்தர் குமார்வேலை தேடி டெல்லிக்கு குடும்பத்துடன் வந்தார். அவரது தந்தை பிளம்பராக பணியாற்றினார். அவரது தாய் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

டெல்லிக்கு வந்த சில நாட்களிலேயே ரவீந்தர்குமார் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு ரவீந்தர் அடிமையானார். போதை தலைக்கேறியவுடன் ஆபாச படங்களைப் பார்த்துள்ளார். இதனால் அவரது மனம் மிருகமாக மாறியுள்ளது. இந்த வெறியில் கண்களில் சிக்கும் பெண் குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய ஆரம்பித்தார். இதற்கு சில 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட்டுகள் தான் இவரது தூண்டில்.

ஆறு முதல் 12 வயது சிறுமிகளைச் சாக்லேட், பணம் கொடுத்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன்பின் கொலை செய்துள்ளார். இப்படி ஆள் கிடைக்காத நாட்களில் 40 கி.மீ தூரம் நடந்து சென்று தனது வேட்டையை முடித்துக் கொண்டு ரவீந்தர் இருப்பிடம் திரும்புவார். கிடைக்கும் இடத்தில் வேலையை செய்து கொண்டே தனது கிரைம் ஹிஸ்டரியைக் கூட்டியுள்ளார். இதனால் இரண்டு மாதங்களுக்கு மேல் யாரிடமும் அவர் வேலை செய்வதில்லை. இதன் காரணமாக தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக போலீஸார் இவர் மீது குற்றம் சாட்டுகின்றனர். 2015-ம் ஆண்டு 6 வயது சிறுமியின் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த போது, சிசிடிவி காட்சிகளில் ஆய்வு செய்த போது தான் ரவீந்தர் குமார் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

டெல்லியில் டிசிபியாக இருந்த விக்ரம்ஜீத் சிங், குழந்தைகள் காணாமல் போன வழக்குகளைத் தோண்டத் துவங்கிய போது ரவீந்தரின் முகம் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பாலியல் பலாத்கார ம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்ட ரவீந்தர், 15-க்கும் மேற்பட்ட குற்றம் நடந்த இடங்களை போலீஸாரிடம் காட்டியுள்ளார். எட்டு ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கில் ரவீந்தருக்கு ஆயுள்தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரவீந்தர் குமார்
ரவீந்தர் குமார்30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை துடிதுடிக்க பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

யார் இந்த ரவீந்தர் குமார்?

உத்தரப்பிரதேசம் மாநிலம், படவுனில் உள்ள கஸ்கஞ்ச் பகுதியில் 1991-ம் ஆண்டு பிறந்தவர் ரவீந்தர்குமார். கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுள்ளார். 2008-ம் ஆண்டு தனது முதல் குற்றத்தைச் செய்துள்ளார் ஆனால், போதிய ஆதாரம் இல்லாததால் ஜாமீனில் விடப்பட்டார்.

இவர் கொலைக்குத் தேர்வு செய்பவர்கள் சாலையோர குழந்தைகள் அல்லது கட்டுமானத் தொழிலாளிகளின் குழந்தைகள், குப்பை பொறுக்கும் அன்றாடம் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் தான். அவரால் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில், கழிவுநீர் தொட்டியில் வீசி எறியப்பட்ட எத்தனையோ குழந்தைகளுக்கு உறவு கிடையாது.

ஒவ்வொரு முறையும் குழந்தைகளைக் கடத்தும் போது அவர்களைக் கொன்ற பின்பே அந்த உடலுடன் ரவீந்தர் குமார் உறவு வைத்துள்ளார். உயிரோடு இருந்தால் ஒத்துழைக்கமாட்டார்கள் என்பதால், அவர்களைக் கொலை செய்து விட்டு எனது வேலையைச் செய்தேன் என்று அவர் போலீஸில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீதித்துறையில் இருந்து இரண்டு முறை தப்பித்ததால், தனது குற்றங்களை அவர் தைரியமாக செய்துள்ளார். டெல்லி, முண்ட்கா, சமய்பூர் பட்லி, பேகம்பூர் மற்றும் விஜய் விஹார் உள்ளிட்ட பகுதிகளிலும் இவரது நரவேட்டை நடந்துள்ளது. எனவே, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்து. இந்த நிலையில், ரவீந்தர் குமாருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in