தூய்மை இந்தியா நகரங்களின் தரவரிசை: தமிழகத்திற்கு கடைசி இடம்

தூய்மை இந்தியா நகரங்களின்  தரவரிசை: தமிழகத்திற்கு கடைசி இடம்

தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஸ்வச் சர்வேக்‌ஷன் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆய்வு 75-வது சுந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு தூய்மை அமிர்தப் பெருவிழாவாக நடத்தப்பட்டது. இதில் 4,354 நகரங்கள் கலந்து கொண்டன. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களின் பட்டியல் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 13 மாநிலங்கள் உள்ள இந்தப் பட்டியலில் 1450 மதிப்பெண்களுடன் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதில், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் பட்டியில் இந்தூர் முதல் இடத்தையும், சூரத் 2-வது இடத்தையும், நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவை 42-வது இடத்தையும், சென்னை 44-வது இடத்தையும், மதுரை 45-வது இடத்தையும் பிடித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in