ராணிப்பேட்டை, கடலூர் மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்!

ராணிப்பேட்டை, கடலூர் மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்!

ராணிப்பேட்டை மற்றும் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக இருந்த ஜீவா சத்யன் மாற்றப்பட்டு மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சக்தி கணேசன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கிரண் ஸ்ருதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியாக ரவுளி பிரியா நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in