தை அமாவாசை: ராமேஸ்வரம் கோயில் நடை நாளை முழுவதும் திறப்பு

தை அமாவாசை: ராமேஸ்வரம் கோயில் நடை நாளை முழுவதும் திறப்பு

தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை நாளை பகல் முழுவதும் திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை (ஜன.21) தை அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து சாயரட்சை உள்ளிட்ட கால பூஜைகள் நடைபெறவுள்ளன.

நண்பகல் 11 மணிக்கு ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக்கரைக்கு புறப்பாடாகி மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை பகல் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மாலை 5:30 மணிக்கு மேல் மண்டகப்படியில் தீபாராதனைகள் நடைபெறும். இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கருட வாகனத்தில் ஸ்ரீராமர் புறப்பாடு நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in