ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்: காரணம் இதுதான்

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்: காரணம் இதுதான்

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச்சென்ற ஆறு மீனவர்களை நேற்று நள்ளிரவில் இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கைது செய்தனர். படகுடன் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் விசாரணைக்கு பிறகு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இப்படி தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதைக் கண்டித்தும், நேற்று கைது செய்யப்பட்டுள்ள ஆறு மீனவர்களையும் அவர்களின் படகுடன் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மீனவர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பத்தாயிரம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் எனவும், நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in