பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? - ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டது குழு!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவை பாஜக இன்று அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 27 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை பாஜக தலைவர் ஜேபி நட்டா இன்று அறிவித்தார். அதன்படி, குழுவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். அர்ஜுன் முண்டா, பூபேந்தர் யாதவ், அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு, அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் மற்றும் பூபேந்தர் படேல் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பாஜக
பாஜக

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோரும் தேர்தல் அறிக்கை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் 27 பேர் கொண்ட பட்டியலில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு என்னென்ன சலுகைகள், அறிவிப்புகள் இடம்பெறப் போகும் என பாஜக கூட்டணியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in