'ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல; சூப்பர் பேயர்’: தமிழிசை இப்படி பேசியதன் காரணம் என்ன?

'ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல; சூப்பர் பேயர்’: தமிழிசை இப்படி பேசியதன் காரணம் என்ன?

தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,
வருமானவரி தினமான இன்று வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவரது மகள் சவுந்தர்யா விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் இந்த விருதை வழங்கினார். அவர் பேசுகையில்," ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல. சூப்பர் பேயர் (அதிக வரி செலுத்துபவர்). இதனால் மக்களுக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறார்" என்றார். தமிழகம், புதுச்சேரி மண்டலத்தில் அதிக வரி செலுத்திய 4 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in