ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெண் மாணவிகளை "தகாத முறையில் தொட்டதற்காக" போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ராம்நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பகவான் சிங் ராஜ்புத் (56), மாணவிகளை தகாத முறையில் தொட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தனர், அவர்கள் காவல்துறையை அணுகி புகார் அளித்தனர்.
இது தொடர்பாகப் பேசிய கபர்தா காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஜமால் கான், "தலைமை ஆசிரியர் தகாத முறையில் பள்ளி மாணவிகளைத் தொடுவதாகவும், அதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் புகார்தாரர்கள் கூறியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நான்கு பேரின் வாக்குமூலங்களை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்ததை அடுத்து தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், மாநிலக் கல்வித் துறை சனிக்கிழமையன்று அவரை பணி இடைநீக்கம் செய்தது.