சம்பளம் கேட்டதால் சிறுநீர் குடிக்கவைத்து தாக்குதல்: பட்டியலின நபருக்கு நேர்ந்த கொடூரம்!

சம்பளம் கேட்டதால் சிறுநீர் குடிக்கவைத்து தாக்குதல்: பட்டியலின நபருக்கு நேர்ந்த கொடூரம்!

ராஜஸ்தானின் சிரோஹியில் பட்டியலின எலக்ட்ரீஷியன் ஒருவர் வேலை செய்ததற்கு சம்பளம் கேட்டுள்ளார். இதற்காக அவரைத் தாக்கி, சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின எலக்ட்ரீசியன் பரத் குமார், சம்பள பாக்கியை கேட்பதற்கு சென்றபோது இந்த கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பாக பேசிய சிரோஹி டிஎஸ்பி தினேஷ் குமார், “நவம்பர் 23 அன்று மூன்று பேர் மீது பரத் குமார் புகார் அளித்தார். குமார் சில மின்சார வேலைகளைச் செய்து 21,100 ரூபாய் பில் செய்துள்ளார். அதில் ரூ.5,000 சம்பளம் முதல் தவணையாக வாங்கினார். நவம்பர் 19 அன்று, அவர் மீதமுள்ள தொகையைக் கேட்பதற்காக மதியம் ஒரு தாபாவுக்குச் சென்றார். ஆனால் அவர்கள் இரவு 9 மணிக்கு வரச் சொல்லியுள்ளனர். இரவு 9.10 மணியளவில் அவர் திரும்பிச் சென்றுள்ளார். அப்போது ​​​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை மற்றவர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினார். கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து சிறுநீர் குடிக்க வைத்தனர். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவரை தாக்கியுள்ளனர். இதனை அவர்களில் ஒருவன் வீடியோவாக எடுத்து சமூக ஊடக தளங்களில் பதிவேற்றியுள்ளான்" என்று கூறினார்.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in