அமித்ஷாவிற்கு துணிச்சல் இருக்கிறதா?: சவால் விடும் ராஜஸ்தான் முதல்வர்

அமித்ஷாவிற்கு துணிச்சல் இருக்கிறதா?: சவால் விடும் 
ராஜஸ்தான் முதல்வர்
அமித்ஷா, அசோக் கெலாட்

“தைரியம் இருந்தால் மதக்கலவரங்கள் குறித்து விரிவான நீதிமன்ற விசாரணை நடத்த அமித்ஷா உத்தரவிட வேண்டும்“ என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சவால் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தியது காங்கிரஸ் கட்சி. ராஜஸ்தான் மாநிலத்தின புதிய முதலமைச்சராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டார். ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அசோக் கெலாட் கூறுகையில், “நாடு முழுவதும் மதக் கலவரங்களும், வகுப்புக் கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளதால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இதனால் நாட்டில் ஒருவிதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

நாட்டில் ஒருவிதமான அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அனுமன் ஜெயந்தி , ராம நவமி என மதக் கலவரங்கள் மற்றும் வகுப்புக் கலவரங்களால் 7 மாநிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்தக் கலவரங்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படுவதில்லை. மதக் கலவரங்களை மோடி மௌனமாக வேடிக்கை பார்த்து வருகிறார். இந்தக் கலவரங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் இதன் பின்னணியில் இயங்குபவர்களை அடையாளம் காண முடியும். ஒரு குறிப்பிட்ட கட்சிதான், அரசியல் ஆதாயங்களுக்காக இதுபோன்ற மதக் கலவரங்களை தூண்டிவிடுகிறது. அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கட்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in