மக்களவைத் தேர்தல்: பாஜக முகாமுக்குத் தாவும் முக்கிய தலைவர்!

தேவேந்திர பட்னவீஸுடன் ராஜ்தாக்கரே.
தேவேந்திர பட்னவீஸுடன் ராஜ்தாக்கரே.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, கட்சியினர் பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர்கள், துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா
பாஜக, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா

எம்என்எஸ் தலைவர்கள் பாலா நந்த்கோங்கர், சந்தீப் தேஷ்பாண்டே, நிதின் சர்தேசாய் ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் நாள்களில் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தேவேந்திர பட்னவிஸ் உடனான தற்போதைய சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை.

ராஜ் தாக்கரே.
ராஜ் தாக்கரே.

மகாராஷ்டிரா மாநிலம் இந்த ஆண்டு இரண்டு பொதுத்தேர்தல்களை எதிர்கொள்ள உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளும், 288 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

தற்போது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in