உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் திடீர் குறைப்பு: ரயில்வேதுறை நடவடிக்கை

உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் திடீர் குறைப்பு: ரயில்வேதுறை நடவடிக்கை

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் தற்போது  மீண்டும் பழையபடி குறைக்கப்பட்டுள்ளது. 

ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய பண்டிகைகள் தொடர்ச்சியாக வந்ததையொட்டி ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.  இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 10 ரூபாய் ஆக இருந்த நடைமேடை கட்டணம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 20 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை,  திருச்சி உட்பட பல்வேறு ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இந்த கட்டண உயர்வு நடைமுறையில் இருந்தது. 

தற்போது பண்டிகைகள் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்ட நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரயில்வே துறை குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில்  ரூ.20 ஆக இருந்த நடைமேடை கட்டணம் இன்று முதல் ரூ.10 ஆக குறைத்து  வசூலிக்கப்படுகிறது. 

 இதனால் பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in