சென்னையில் மழை நீடிக்கும்; தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்யும்: வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை!

மழை
மழை சென்னையில் மழை நீடிக்கும்; தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்யும்: வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை!

தமிழ்நாடு வடஉள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பேரிடர் அபாய குறைப்பு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்கள் மின்னல் தாக்கத்தின் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்கக்கூடாது. நீச்சல் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். திறந்த வெளியில் இருக்க நேரிட்டால் இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய குதி கால்களை ஒன்று சேர்த்து, தலைகுனிந்து, தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும். தரையை ஒட்டி அமர்வதால் மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாக படுக்கக்கூடாது. எனவே இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, சென்னையில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்தது. திடீர் மழையால் வெப்பத்தில் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in