பெங்களூருவில் இன்று கனமழை பெய்யும் : வானிலை மைய அறிவிப்பால் மக்கள் கவலை

பெங்களூருவில் இன்று கனமழை பெய்யும் : வானிலை மைய அறிவிப்பால் மக்கள் கவலை

பெங்களூருவில் செப்.9-ம் தேதி வரை மழை தொடரும் என்றும், இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக குடியிருப்பில் இருந்த மக்களை படகில் சென்று மீட்கும் பணி நடைபெற்றது. இன்று பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கியுள்ளது. சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் பல கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

இந்த நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பெங்களூருவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் பெங்களூர் நகரவாசிகள் கவலையடைந்துள்ளனர். பெங்களூருவில் இந்த ஆண்டு இயல்பை விட 162 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட சேதமதிப்பீடு குறித்த குறிப்பாணையை மாநில அரசு தயாரித்துள்ளதாக கூறி, மத்திய அரசிடம் நியாயமான இழப்பீடு வழங்க முதல்வர் பசவராஜ் பொம்மை கோரியுள்ளார். பெங்களூருவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஐடி நிறுவனங்கள் சரியாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் அந்த ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக அமைச்சர் சி.என்.அஸ்வத்நாராயணன் ஐடி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இன்று விவாதிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டத்தில், தலைமைச் செயலர் வந்திதா சர்மா, பெங்களூரு சிவில் ஆணையர் துஷார் கிரிநாத், நகர நீர் ஆணையம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் இன்ஃபோசிஸ், விப்ரோ, நாஸ்காம், கோல்ட்மேன் சாக்ஸ், இன்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பிலிப்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். பெங்களூருவிற்கு செப்.9-ம் தேதி வரை மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in