9 மாவட்டங்களில் அதிகாலை முதல் வெளுத்து வாங்குகிறது மழை!

9 மாவட்டங்களில் அதிகாலை முதல் வெளுத்து வாங்குகிறது மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி தமிழகத்தில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை தொடங்கி பெய்து வருகிறது.

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை அக் .28 - தேதி வாக்கில் தொடங்கியது. மயிலாடுதுறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்தாலும் பல மாவட்டங்களில் இன்னும் போதுமான அளவு பருவமழை பெய்யவில்லை.  இந்தநிலையில் அடுத்த சுற்று  மழை  டிசம்பர் 1-ம் தேதி முதல்  தொடங்கும் என  வானிலை நிலையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை தொடங்கியுள்ளது.

தற்போது டெல்டா மாவட்டங்கள் உட்பட  பல பகுதியில் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர்,  மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 9.45 வரை எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வரும் 5-ம் தேதியன்று  அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில் அதுவரையிலும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த  காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன் விளைவாக  வரும் 9-ம்  தேதியிலிருந்து மீண்டும் கனமழை  பெய்யலாம்   என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in