எச்சரிக்கை...70 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழை... வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

காற்றுடன் மழை
காற்றுடன் மழை

டெல்லியில் திடீர் வானிலை மாற்றத்தால் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீட்டை வெளியே மக்கள் வரவேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரித்துள்ளது.

திடீர் வானிலை மாற்றத்தாலும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து நெருங்கி வரும் மேகங்களாலும் தேசிய தலைநகரான டெல்லியின் பல பகுதிகள் அதன் அண்டை பகுதிகளான நொய்டா, குர்கான் மற்றும் காசியாபாத் போன்ற பகுதிகளில் இன்று காலையில் 50 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மேலும் மழை, சூறைக்காற்று இன்னும் சில மணி நேரம் நீடிக்கலாம் என்பதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், மரங்களுக்கு அடியில் தங்குவதை தவிர்க்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முடிந்தால் பயணத்தை மக்கள் தவிர்க்குமாறு ஐஎம்டி கேட்டுக் கொண்டுள்ளது.

ஷாம்லி மற்றும் முசாபர்நகர் போன்ற மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in