தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா?

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், கோயமுத்தூர், தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ மேற்கு திசைக்காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைப்பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேல்பவானி, அவலாஞ்சியில் தலா 7 செ.மீ, திருபத்தூரில் 6 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in