அடுத்த 2 மணிநேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுகிறது: எச்சரிக்கும் வானிலை மையம்

அடுத்த 2 மணிநேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுகிறது:  எச்சரிக்கும் வானிலை மையம்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in