
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்க கடலின் தென்மேற்கு மற்றும் இலங்கை பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களான நாகை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.