அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை: குளிர்ச்சி தரும் வானிலை மைய அறிவிப்பு

21 மாவட்டங்களில் மழை
21 மாவட்டங்களில் மழைஅடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை: குளிர்ச்சி தரும் வானிலை மைய அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் அடித்ததால் முதியோர், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். வெப்ப அலை வீசுவதால் முதியோர், கர்ப்பிணிகள் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று சுகாதாரத்துறையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மனதைக் குளிர்விக்கும் வகையில் மழை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in