கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை: வானிலை மையம் எச்சரிக்கை

கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு  மழை: வானிலை மையம் எச்சரிக்கை

கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாட்டால் ஜன.3-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் ஜன.3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாட்டால் ஜன- 3, 4, 5 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றும், நாளையும் வட மாவட்டங்களில் அதிகாலையில் வறண்ட வானிலையுடன் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in